Today’s Live: மைசூரு பட்டாசு குடோனில் தீ விபத்து..!
தீ விபத்து :
மைசூரு நகரில் உள்ள ஹெப்பல் தொழில் பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த பட்டாசு கடையில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதானால், 50க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. வெடி விபத்து காரணமாக சுமார் 2 கிமீ தொலைவிற்கு புகை சூழ்ந்துள்ளது. இந்த விபத்தில் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
Sad News!! A cracker factory in Mysore’s Hootagalli area has caught fire. ????
Hoping for everyone’s safety & a quick response from the authorities.#MysuruCity pic.twitter.com/RQ5MaABw3H
— Mysuru City (@MysuruCity_) April 19, 2023
19.04.2023 4:05 PM
மாட்டு வண்டி பந்தயம் :
பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில், மாட்டு வண்டி பந்தயத்தை மீண்டும் தொடங்கக் கோரி கிலா ராய்ப்பூர் விளையாட்டுக் கூட்டமைப்புடன் இணைந்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூரைச் சந்தித்தார். பஞ்சாபின் 12,000 கிராமங்களின் கலாச்சார பாரம்பரியத்திற்கு மாட்டு வண்டி பந்தயம் அவசியம் என்று ஜெய்வீர் ஷெர்கில் ட்வீட் செய்துள்ளார்.
19.04.2023 2:15 PM
அரசியலுக்கு வருகிறாரா விஜய்:
சென்னை: நடிகர் விஜய் தற்போது அரசியலுக்கு வருவதற்கான முயற்சியை செய்து வருகிறார். அதை நான் வரவேற்கிறேன், அவர் வரும் போது மாற்று அரசியலுக்கான தேவை அதிகமாக இருக்கும் நான் ஏன் அவரை ஆதரிக்க வேண்டும்? நான் யாரையும் ஆதரிக்கப்போவது இல்லை, அவர்தான் என்னை ஆதரிக்க வேண்டும்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் நாம் தமிழர் கட்சிகு ஆதரவா? என்ற கேள்விக்கு, அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் அளித்துள்ளார்.
19.04.2023 1:40 PM
மீனவர்களின் போராட்டம் வாபஸ்
சென்னை: லூப் சாலையில் அமைத்திருந்த மீன்கடைகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கடந்த 5 நாட்களாக மீனவர்கள் போராட்டம் நடத்திவந்த நிலையில், தற்போது அரசின் கோரிக்கையை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர். அரசு தங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் எனவும் மீனவ மக்கள் தெரிவித்துள்ளனர்.
19.04.2023 1:10 PM
தீர்மானம் நிறைவேற்றம் :
ஆதிதிராவிட கிறிஸ்தவர்கள் பட்டியலின இட ஒதுக்கீடு பெறும் வகையில் உரிய சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானம் தாக்கல் செய்தார். எதிர்கட்சி உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்புத்தெரிவித்து சட்டசபையை விட்டு வெளியேறிய நிலையில், தற்பொழுது ஆதிதிராவிட கிறிஸ்தவர்கள் பட்டியலின இட ஒதுக்கீடு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
19.04.2023 12:33 PM
தனித் தீர்மானம் :
ஆதிதிராவிட கிறிஸ்தவர்கள் பட்டியலின இட ஒதுக்கீடு பெறும் வகையில் உரிய சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானம் தாக்கல் செய்தார். மதம் மாறிய பின்னும் ஆதிதிராவிட மக்கள் தீண்டாமை உள்ளிட்ட சாதிய வன்கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். எனவே, உரிய சட்டத்திருத்தம் மேற்கொண்டு உரிய சலுகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
19.04.2023 12:10 PM
நேபாள அதிபர் உடல் நலக்குறைவால் பாதிப்பு :
நேபாள அதிபர் ராமச்சந்திர பவுடலின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்ததால் அவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நேபாளத்தின் மகாராஜ்கஞ்சில் உள்ள திரிபுவன் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மேல் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்படுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.
19.04.2023 11:45 AM
அதிமுக போட்டி :
கர்நாடக மாநிலம் புலிகேசி நகர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக போட்டியிடும் என்று பொதுச் செயலாளர் இபிஎஸ் சற்றுமுன் அதிரடியாக அறிவித்துள்ளார். அதிமுக ஆட்சிமன்றக்குழு பரிசீலித்து எடுத்த முடிவின் அடிப்படையில், பெங்களூரு அருகேயுள்ள புலிகேசி நகர் தொகுதியில் கர்நாடக மாநில அதிமுக அவைத் தலைவர் அன்பரசன் போட்டியிடுவார் என அறிவித்துள்ளார்.
19.04.2023 11:05 AM
முதல்வர் நிவாரணம் :
காஞ்சிபுரம் மாவட்டம் நெல்வாய் கிராமத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவரது குழந்தைகள் சேர்ந்த விஜய், பூமிகா என்ற இரு சிறுவர்களும் நேற்று எதிர்பாராத விதமாக ஏரியில் மூழ்கி உயிரிழந்தனர். இவர்களது மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூபாய் இரண்டு லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
19.04.2023 10:40 AM
ரயில் விபத்து:
மத்திய பிரதேச மாநிலம் சிங்பூரில் சற்றுமுன் இரு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ரயில் எஞ்சின்கள் தீப்பிடித்ததில் ஓட்டுநர் காயமடைந்ததாக தகவல் வந்துள்ளது. இந்த விபத்தில் ஏற்பட்ட சேதாரம் குறித்து தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. இந்த சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
19.04.2023 10:10 AM