இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடி..!
இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடி காரணமாக 5 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி வருகை
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. ஒருவேளை உணவிற்கு கூட திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
அகதிகள் வருகை
அந்த வகையில், பலர் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு அகதிகளாக வருகின்றனர். இதுவரை 100-க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ள நிலையில், மேலும், 5 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி வருகை புரிந்துள்ளனர்.