மருத்துவமனையில் புகுந்து கைதிகளை வெட்டிய முகமூடி அணிந்த மர்மநபர்கள்..!
விருதுநகரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதிகளை தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு.
விருதுநகரில், கொலை வழக்கில் கைதான விஷ்ணு, யுவராஜ் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த கைதிகளை முகமூடி அணிந்து அவனத மர்மநபர்கள் தாக்கியுள்ளனர். கைதிகளை தாக்கிய மர்ம நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனையில் புகுந்து இரண்டு கைதிகளை வெட்டிவிட்டு தப்பி ஓடிய 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போத்தி ராஜன், அருண், விஜி, ராமச்சந்திரன், சோனயன் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.