சிறையில் இருந்து மிரட்டல் செய்தி அனுப்பிய உ.பி கேங்ஸ்டர் ஆதிக்.? வெளியான அதிர்ச்சி தகவல்.!
கடந்த சனிக்கிழமை போலீசார் முன்னிலையில் சுட்டுக்கொல்லப்பட்ட உ.பி ரவுடி ஆதிக் அகமதுவின் வாட்டசாப் செய்திகள் தற்போது வெளியாகியுள்ளன.
கடந்த சனிக்கிழமையன்று, உத்திர பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.பியும், கேங்ஸ்டாருமான அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோர் , உமேஷ் பால் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைக்காக குஜராத்தின் சபர்மதி சிறையில் இருந்து பிரயாக்ராஜுக்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது காவலர்கள் முன்னிலையிலேயே மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு அதிக் அகமது மற்றும் அவரது சகோதரரை கொலை செய்தனர்.
சுட்டுக்கொலை :
இதில் கொலையாளிகளை சம்பவ இடத்தியிலேயே காவல்துறையினர் பிடித்தனர். காவல்துறை முன்னிலையியேலே கேங்ஸ்டர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இந்த கொலை சம்பவத்தை தொடர்ந்து பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் , சம்பவங்கள் பற்றிய செய்திகள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. நேற்று ஆதிக்-கின் வழக்கறிஞர் வீடு முன்பு வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இந்த சம்பவம் அப்பகுதியில் மேலும், பதற்றத்தை ஏற்படுத்தியது. இது உள்நோக்கத்துடன் நடந்த வெடிகுண்டு சம்பவம் இல்லை என காவல்துறையினர் விளக்கம் அளித்தனர்.
ஆதிக் மிரட்டல் செய்தி :
அதனை அடுத்து தற்போது, ரவுடி ஆதிக் முகமதுவின் வாட்டசாப் செய்திகள் வெளியாகி உள்ளன. அதில், நீங்கள் என்னை மிகவும் சாதகமாக பயன்படுத்தி கொண்டீர்கள். இன்று என்மீது நீங்கள் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து காவல்துறையின் நிழலில் இருக்கிறீர்கள் என சிறையிலிருந்தபடி, லக்னோவைச் சேர்ந்த கட்டிட தொழிலதிபருக்கு அதிக் அகமது இந்த செய்தியை அனுப்பியதாக கூறப்படுகிறது.
எனது மகன்கள் :
மேலும், கடைசியாக ஒரு முறை சொல்கிறேன், விரைவில் நிலைமை மாறும், நான் வெளியே வருவேன். நான் இதுவரை மிகவும் பொறுமையாக இருந்தேன். என் மகன்கள் மருத்துவராகவோ அல்லது வக்கீலாகவோ ஆக மாட்டார்கள் என்று மிரட்டும் தொனியில் வாட்சாப் செய்திகள் அனுப்பப்பட்டுளளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொலை மிரட்டல் :
இதற்கிடையில், உயிரிழந்த ரவுடி ஆதிக் ஆகமதுவால், அச்சுறுத்தப்பட்ட ஒரு ஒருவர் தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், ‘அதிக் மூலம் எனது வீட்டை விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது ராய்ப்பூரில் இருந்த என் மனைவியைக் கொன்றுவிடுவதாக அவர்கள் (ஆதிக்) மிரட்டினர்கள்.’ என கூறியுள்ளார்.
உச்சநீதிமன்றம் :
ஆதிக் அகமது உயிரிழந்த பின்னர் அவர் மிரட்டல் விடுத்த செய்திகள் ஒவ்வொன்றாக வெளியே வர ஆரம்பித்துள்ளது. இந்த தகவல்கள் உச்சநீதிமன்றத்தில் நடைபெரும் ஆதிக் அகமதுவின் மரணம் தொடர்பான விசாரணையின் போது தாக்கல் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.