இன்று இந்த மாவட்டத்துக்கு மட்டும் ‘உள்ளூர் விடுமுறை’…மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!!
திருச்சி மாவட்டத்திற்கு மட்டும் இன்று உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ரங்கம் அரங்கநாதர் கோவிலில் இன்று தேரோட்ட நிகழ்வு மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இந்த தேரோட்டத்தை பார்ப்பதற்காக பல மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் வருகை தருகிறார்கள்.
எனவே, இதனை முன்னிட்டு இன்று ஒரு நாள் மட்டும் பள்ளி, கல்லூரி அரசு அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார். மேலும், இந்த உள்ளூர் விடுமுறை தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொருந்தாது என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் மற்றும் தேர்த்திருவிழா முன்னிட்டு ஏப்ரல் 18 மற்றும் 19 ஆகிய 2 நாட்களுக்கு திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.