ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கு.! காங்கிரஸ் எம்.பி கார்த்திக் சிதம்பரத்தின் 11 கோடி சொத்துக்கள் முடக்கம்.!
கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரத்தின் 11 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா மூலம் சட்டவிரோத பணபரிவார்தனை நடத்தியது தொடர்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரத்தின் மீது அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த விசாரணையில் தற்போது கார்த்திக் சிதம்பரத்தின் சொத்துக்கள் முடக்கப்ட்டுள்ளன.
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரத்தின் 2 அசையும் சொத்துக்கள் மற்றும் ஒரு அசையா சொத்துக்கள் என 11 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கப்பட்டுள்ளனர்.