#IPL Breaking: மும்பை அணி அபார பந்துவீச்சு..! ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த மும்பை அணி..!
ஐபிஎல் தொடரின் இன்றைய MI vs SRH போட்டியில், மும்பை அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.
16-வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள், ஹைதராபாத்தின் ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் முதலில், பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதன்படி, முதலில் களமிறங்கிய மும்பை அணியில் தொடக்க வீரர்களாக ரோஹித் மற்றும் இஷான் களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய ரோஹித் 28 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத்தொடர்ந்து, இஷான் மற்றும் சூர்யகுமார் ஆட்டமிழக்க அதிரடியாக விளையாடிய கேமரூன் க்ரீன் தனது முதல் ஐபிஎல் அரை சதத்தை நிறைவு செய்தார். முடிவில் மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 192 ரன்கள் குவித்துள்ளது.
இதனையடுத்து, 193 ரன்கள் என்ற இலக்கில் ஹைதராபாத் அணியில், தொடக்க வீரர்களாக ஹாரி புரூக், மயங்க் அகர்வால் களமிறங்கினர். ஹாரி புரூக் (9 ரன்கள்) மற்றும் மயங்க் அகர்வால் (48 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து களமிறங்கிய ஹென்ரிச் கிளாசென் (37 ரன்கள்) அதிரடியாக விளையாடி வந்தார். பரப்பான போட்டியின் இறுதியில் மயங்க் மார்கண்டே, புவனேஷ்வர் குமார் களத்தில் இருந்த நிலையில் ஹைதராபாத் அணி மும்பை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 178 ரங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனால், மும்பை இந்தியன்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 48 ரன்களும், ஹென்ரிச் கிளாசென் 36 ரன்களும், ஐடன் மார்க்ராம் 22 ரன்களும் குவித்துள்ளனர். மும்பை அணியில் ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், மெரிடித் மற்றும் பியூஷ் சாவ்லா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர். இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி தொடர்ச்சியாக 3 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 6 வது இடத்தில் உள்ளது.