IPL MI vs SRH: க்ரீன் முதல் ஐபிஎல் அரைசதம்; ஹைதராபாத் அணிக்கு இதுதான் இலக்கு.!
ஐபிஎல் தொடரின் இன்றைய MI vs SRH போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை அணி, அதிரடியாக விளையாடி 192/5 ரன்கள் குவிப்பு.
16-வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள், ஹைதராபாத்தின் ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் முதலில், பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதன்படி முதலில் களமிறங்கிய மும்பை அணியில் தொடக்க வீரர்களாக ரோஹித் மற்றும் இஷான் ஆட்டத்தை தொடங்கினர். அதிரடியாக விளையாடிய ரோஹித் 28 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத்தொடர்ந்து இஷான்(38 ரன்கள்) மற்றும் சூர்யகுமார்(7 ரன்கள்) எடுத்து கேட்ச் முறையில் ஆட்டமிழந்தனர்.
Did You Watch – Two stupendous catches by the #SRH Skipper @AidzMarkram ends Ishan Kishan and Suryakumar Yadav’s stay out there in the middle.#SRHvMI pic.twitter.com/a1sGNjV6r1
— IndianPremierLeague (@IPL) April 18, 2023
இந்த இரு கேட்ச் வாய்ப்பையும் மார்க்ரம் அற்புதமாக பிடித்தார். இதையடுத்து களமிறங்கிய கேமரூன் க்ரீன் அதிரடியாக விளையாடி வந்தார். அவருடன் திலக் வர்மாவும் ஜோடி சேர்ந்து மும்பை அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்தனர். சிக்ஸர்களை அடித்து பறக்கவிட்டுவந்த திலக் வர்மா 17 பந்துகளில் 4 சிக்ஸர் மற்றும் 2 போர்கள் என 37 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
இதனையடுத்து டிம் டேவிட்(16 ரன்கள்) களமிறங்கி கேமரூன் க்ரீன் உடன் சேர்ந்து ரன் எண்ணிக்கையை உயர்த்தினார். ஒருபுறம் அதிரடியாக விளையாடிய கேமரூன் க்ரீன்(64* ரன்கள்) தனது முதல் ஐபிஎல் அரை சதத்தை நிறைவு செய்தார். முடிவில் மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 192 ரன்கள் குவித்துள்ளது. ஹைதராபாத் அணி சார்பில் மார்கோ ஜான்சன் 2 விக்கெட்கள் வீழ்த்தினார்.