சட்டமன்ற நேரலை விவகாரம், முதல்வர் ஸ்டாலின் பதில்; ஏற்க மறுத்து அதிமுக வெளிநடப்பு.!
சட்டமன்ற நிகழ்ச்சிகளை நேரலை செய்வது தொலைக்காட்சிகளின் முடிவுகளுக்கு உட்பட்டது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் இன்று மாலை ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் துறை சார்பாக விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய அதிமுகவின் கொறடா வேலுமணி, சட்டப்பேரவையில் எதிர்கட்சித் தலைவருக்கு பேச வாய்ப்பு கொடுங்கள்.
எடப்பாடி பழனிசாமி அவர்கள் பேசுவதையாவது நேரலையில் ஒளிபரப்பு செய்யவேண்டும், அமைச்சர் பேசுவது மட்டும்தான் நேரலையில் வருகிறது, இதனால் இபிஎஸ் பேசுவது நேரலை செய்யப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், சட்டமன்ற நிகழ்ச்சிகளை நேரலை செய்வது என்பது தொலைக்காட்சிகளின் முடிவுகளை பொறுத்தது.
தொலைக்காட்சிகளுக்கு இதனை மட்டும் நேரலையில் ஒளிபரப்பு செய்யுங்கள் என கட்டுப்படுத்தமுடியாது, இது தொலைக்காட்சிகளின் முடிவுகளுக்கு உட்பட்டது என தெரிவித்திருக்கிறார். முதல்வரின் இந்த பதிலை ஏற்க மறுத்து, அதிமுக சட்டப்பேரவையை விட்டு வெளிநடப்பு செய்துள்ளனர்.