12 இடங்களில் சதமடித்த வெயில்.! அடுத்த 3 மணி நேரத்திற்கு 3 மாவட்டங்களில் மழை…
தமிழ்நாட்டில் இன்று 12 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இன்றும், நாளையும் வெயில் அதிகரிக்கும்
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். என சென்னை வானிலை ஆய்வு மையம் அலர்ட் கொடுத்துள்ளது.
அந்த வகையில், தமிழ்நாட்டில் இன்று 12 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவாகியுள்ளது, அதில், அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 106.7 டிகிரி சேலத்தில் 106.1, ஈரோட்டில் 105.08, வேலூரில் 104.54 ஆக வெப்பநிலை பதிவாகியுள்ளது.
3 மாவட்டங்களுக்கு மழை:
நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களின் சில பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு நிசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவக்கூடும். இதன் காரணமாக, நாளை மறுநாள் தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.