தீ பரவட்டும் – கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்த தமிழக முதல்வர்..!
கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் ஆதரவு கடிதத்திற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
மாநில நிர்வாகத்தின் செயல்பாடுகளைப் பாதிக்கும் வகையிலான ஆளுநர்களின் நடவடிக்கைக்கு எதிராக இணைந்து செயல்படக்கோரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் கடிதத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆதரவு கடிதம் எழுதியுலாளர். இந்த கடிதத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எனது கடிதத்திற்கு உங்கள் உடனடி பதில் மற்றும் முழு ஆதரவைவழங்கியதற்கு நன்றி. மாநில சியாட்சியை பறிக்கும் எந்த முயற்சிக்கும் எதிராக தமிழ்நாடும், கேரளாவும் பாரம்பரியமான அரணாக இருந்து வருகின்றன; ஆளுநரின் அத்துமீறலுக்கு எதிரான அறப்போரிலும் வெற்றி பெறுவோம்.’ என பதிவிட்டுள்ளார்.
Thank you Hon @PinarayiVijayan for your prompt response to my letter & extending full support.
TN & Kerala have traditionally stood as a bulwark against any attempt to erode state autonomy. We will win in our crusade against the gubernatorial overreach too.#தீ_பரவட்டும்! https://t.co/UdZI4RSRBA
— M.K.Stalin (@mkstalin) April 18, 2023