PSLV-C55: 750 கிலோ எடை.. சிங்கப்பூர் செயற்கைக்கோளை ஏப்.22ம் தேதி விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ!
சிங்கப்பூரின் 750 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை பிஎஸ்எல்விசி-55 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவு.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது அடுத்த பெரிய பணிக்காக வாடிக்கையாளர் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தத் தயாராகி வருகிறது. இந்தியாவுக்கு தேவையான தகவல் தொடர்பு, வழிகாட்டு செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்கள் மூலம் விண்ணில் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தி வருகிறது.
வணிகரீதியான செயற்கைகோள்:
இத்துடன், வணிகரீதியாகவும் வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்தி வருகிறது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ). அந்தவகையில், சிங்கபூருக்குச் சொந்தமான 750 கிலோ எடை கொண்ட டெலியோஸ்-2 எனும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருந்தது.
டெலியோஸ்-2:
சிங்கப்பூரின் டெலியோஸ்-2 எனும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் 24 மணிநேரமும், அனைத்து வானிலை குறித்த படங்களையும் படம்பிடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ST இன்ஜினியரிங் உருவாக்கிய 750 கிலோகிராம் செயற்கைக்கோள், ஹாட்ஸ்பாட் கண்காணிப்பு மற்றும் மூடுபனி மேலாண்மை, விமான விபத்து தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மற்றும் பலவற்றிற்குப் பயன்படுத்தக்கூடிய படங்களை வழங்கும் என கூறப்பட்டுள்ளது.
இஸ்ரோ அறிவிப்பு:
அதன்படி, சிங்கப்பூரின் 750 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை பிஎஸ்எல்விசி-55 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவு செய்தது. அதுவும், இந்த செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து ஏவ முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து, இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட் மூலம் 750 கிலோ எடை கொண்ட டெலியோஸ்-2 எனும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை வரும் ஏப்.,22ம் தேதி மதியம் 2.19 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது என தெரிவித்துள்ளது.
PSLV-C55/TeLEOS-02 Mission
The launch is scheduled
on ????April 22, 2023, at ????14:19 Hrs IST.The public can witness the launch from Launch View Gallery, Sriharikota, by registering through the link: https://t.co/J9jd8ymp2a
— ISRO (@isro) April 17, 2023