அடடே…! தளபதி ஸ்டைலில் ரசிகர்களுக்கு பிரியாணி பரிமாறிய நடிகர் சிலம்பரசன்.!
சென்னையில் நடைபெற்ற ஃபேன்ஸ் கிளப் மீட்டிங்கில் நடிகர் சிம்பு ரசிகர்களுக்கு பிரியாணி பரிமாறினார்.
நடிகர் சிம்பு நடித்த ‘பத்து தல’ திரைப்படம் கடந்த மாதம் 30ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியானது. இப்படம் உலகளவு பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரூ.50 கோடிகள் கடந்திருக்கும் என எதிர்பார்ப்படுகிறது. இதனை தொடர்ந்து சிம்புவின் 48-வது திரைப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தை கண்ணனும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரிய சாமி தான் இயக்குகிறார்.
தற்போது, நீண்ட நாட்கள் கழித்து தனது ரசிகர்கள் மற்றும் ரசிகர் மன்ற நிர்வாகிகளை நேரில் சந்தித்துள்ளார். சென்னையில், இன்று நடைபெற்ற ரசிகர்கள் சந்திப்பின் போது, தனது ரசிங்கர்களுடன் செல்ஃபீ எடுத்துக்கொண்டார்.
#Simbu fans meet today pic.twitter.com/2dJQjoSdge
— SmartBarani (@SmartBarani) April 18, 2023
பின்னர், அவர்களுக்கு பிரியாணி விருந்து ஏற்பாடு செய்திருந்தார், அப்போது தனது ரசிகர்களுக்கு பிரியாணியை பரிமாறி கொண்டார் நடிகர் சிம்பு. இப்பொது, இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில், விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவரின் ரசிகர்கள் போலவே, நடிகர் சிம்புவுக்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்நிலையில், சிம்பு தனது ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து வைத்ததை, தளபதி விஜய்யுடன் ஒப்பிட்டு பேசி வருகிறார்கள். அதாவது, எப்போதும் விஜய் தனது ரசிகர்களை சந்திக்கும்போதெல்லாம் பிரியாணி விருந்து வைப்பது வழக்கம்.