அதிகரிக்கும் வெயிலின் தாக்கம்.! பணிநேரத்தை மாற்றியமைக்க மத்திய அரசு நடவடிக்கை.!
அதிகரிக்கும் வெயிலின் தாக்கத்தால் நிறுவனங்கள் பணிநேரத்தை மாற்றியமைப்பதை மாநில அரசு உறுதிப்படுத்த வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
இந்தியவில் அடுத்து வரும் வார நாட்களில் வெயிலின் தாக்கமானது வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் வயதானவர்கள், குழந்தைகள் மதிய வெயிலில் வெளியில் செல்ல வேண்டாம் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது தொழிலாளர்களின் நலன் கருதி மத்திய அரசானது, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் பணிநேரத்தை மாநிலத்தில் இயங்கும் நிறுவனங்கள் மாற்றியமைக்க வேண்டும் என குறிப்பிட பட்டுள்ளது.
மேலும் , கட்டுமான பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள் நேரத்தை குறைப்பது, தண்ணீர் வசதி, மருத்துவ வசதி ஆகியவற்றை ஏற்பாடு செய்து தருவது மதிய வேளையில் பணிநேரத்தை மாற்றுவது உள்ளிட்டவைகளை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.