நஷ்டமும், மனஉளைச்சலும் ஏற்பட்டுள்ளது – விஜய் ஆண்டனி வேதனை.!
பிச்சைக்காரன் 2 பட வெளியீட்டை தள்ளிவைத்ததால் மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளது என்று நடிகர் விஜய் ஆண்டனி வேதனை தெரிவித்துள்ளார்.
பிச்சைக்காரன்-2 படத்தை இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி இயக்கி தானே நடிகராகவும் நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சமீபத்தில் படத்தை வெளியிடுவதற்குத் தடை கோரி சென்னை உயர்நிதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதில், தன்னுடைய கதையை பிச்சைக்காரன்-2 என்ற பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளாதாக உதவி இயக்குனர் பரணி வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், இதற்கு முன்னதாக, படத்துக்கு தடை விதிக்கக்கோரி ராஜ கணபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனால், படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இயக்குனர் பரணி தொடர்ந்த வழக்குடன் ராஜ கணபதியின் வழக்கும் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் நடிகர் விஜய் ஆண்டனி பதில் மனு அளித்துள்ளார்.
விஜய் ஆண்டனி பதில் மனு:
பிச்சைக்காரன்-2 படத்தின் வெளியீட்டை தள்ளிவைத்ததால் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது என சென்னை உயர் நீதிமன்றத்தில் விஜய் ஆண்டனி பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘ஆய்வுக்கூடம் படத்திற்கும் இதுக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை. பட வெளியீட்டை தடுக்கவே கடைசி நேரத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ என ராஜ கணபதி தொடர்ந்து வழக்குக்கு விஜய் ஆண்டனி பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.