சிஎஸ்கே போட்டியில் விதி மீறிய கோலி… அதிரடியாக ஃபைன் போட்ட ‘ஐபிஎல்’ நிர்வாகம்.!!

Default Image

பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் 8 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தோல்வியடைந்தது. இந்த போட்டியில் பெங்களூர் வீரர் விராட் கோலிக்கு ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக அவரது சம்பளத்தில்  10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை அணியில் சிஎஸ்கே வீரர் ருதுராஜ் பேட்டிங் செய்துவிட்டு ஆட்டம் இழந்த போதும், அதைபோல், சிவம் துபே கேட்ச் ஆனபோதும் விராட் கோலி மைதானத்தில் கை தட்டி கூச்சல் போட்டார். இதனை பார்த்த பலருக்கும் ஒரு விக்கெட் தானே அதற்கு ஏன் இப்படி என விராட் கோலியை சமூக வலைத்தளங்களில் டேக் செய்து கேள்வி எழுப்பினார்கள்.

இதுமட்டுமின்றி, பெங்களூர் அணியின் கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல் பேட்டிங் செய்து சிக்ஸர்கள் அடித்துக்கொண்டிருந்தபோதும் டிரெஸ்ஸிங் ரூமில் அமர்ந்திருந்து கொண்டு கூச்சல் போட்டார். இத்தகைய செயலுக்காக விராட் கோலிக்கு ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக அவரது சம்பளத்தில்  10 சதவீதம் அபராதம் விதித்துள்ளது.

மேலும், நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்கள் முடிவில் 226 ரன்கள் குவித்தது. அடுத்ததாக களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 218 ரன்கள் எடுத்து. இதன் மூலம் சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்