உ.பி ரவுடிகள் போலீசார் முன்னிலையில் சுட்டு கொலை.! உச்சநீதிமன்றத்தில் ஏப்ரல் 24இல் விசாரணை.!

Default Image

உ.பி ரவுடிகள் போலீசார் முன்னிலையில் சுட்டு  கொல்லப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் ஏப்ரல் 24இல் இதுதொடர்பாக விசாரணை. 

வழக்கறிஞர் உமேஷ் பால் கொலை வழக்கில் உத்தர பிரதேசத்தின் முன்னாள் எம்எல்ஏவும் பிரபல ரவுடியுமான அத்திக் அகமதுவும் அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோர் கைது  செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.  இந்த நிலையில், அத்திக் அகமதுவும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமதுவும் மருத்துவ சிகிச்சைக்காக பிரயாக்ராஜ் அழைத்துச் செல்லப்பட்டபோது மர்ம நபர்களால் கொல்லப்பட்டுள்ளனர்.

உச்சநீதிமன்றத்தில் விசாரணை 

atiq

இந்த சம்பவம் உத்திர பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், உத்தரபிரதேசத்தில் 2017 முதல் நடந்த அனைத்து என்கவுன்டர் கொலைகள் குறித்தும் சுதந்திரமான விசாரணை கோரி வழக்கறிஞர் விஷால் திவாரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏப்ரல் 24ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.

அந்த மனுவில், உத்தரபிரதேசத்தில் 2017-ம் ஆண்டு முதல் இதுவரை நடந்த 183 என்கவுன்டர்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது. அதீக் கொல்லப்பட்டதைக் குறிப்பிட்டு, “காவல்துறையினரின் இத்தகைய நடவடிக்கைகள் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு கடுமையான அச்சுறுத்தல் மற்றும் ஒரு காவல்துறை அரசுக்கு வழிவகுக்கும்”  மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஒரு ஜனநாயக சமூகத்தில், காவல்துறையை இறுதி நீதி வழங்கும் ஒரு முறையாகவோ அல்லது தண்டிக்கும் அதிகாரியாகவோ மாற அனுமதிக்க முடியாது. தண்டனை வழங்கும் அதிகாரம் நீதித்துறைக்கு மட்டுமே உள்ளது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசின் 6 ஆண்டுகளில் என்கவுன்டர்களில் 183 குற்றவாளிகளை சுட்டுக் கொன்றுள்ளதாகவும், இதில் ஆசாத் மற்றும் அவரது கூட்டாளிகளும் உள்ளடங்குவதாகவும் உத்தரப் பிரதேச காவல்துறை வெள்ளிக்கிழமை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்