சூடான் ராணுவ மோதல்..! இந்தியர்களுக்கு உதவ எம்இஏ கட்டுப்பாட்டு அறை..!

Default Image

சூடானில் நடைபெற்று வரும் ராணுவ மோதல்களுக்கு மத்தியில் இந்தியர்களுக்கு உதவ எம்இஏ (MEA) கட்டுப்பாட்டு அறையை உருவாக்கியுள்ளது.

சூடானில் ராணுவ மோதல் :

சூடான் ராணுவத்துக்கும், துணை ராணுவ ஆதரவு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் அங்கு கடும் துப்பாக்கிச் சூடு மற்றும் கலவரங்கள் நடந்து வருகிறது. சக்தி வாய்ந்த துணை ராணுவக் குழுவான ஆர்எஸ்எஃப்-ன் (RSF) நடவடிக்கைகள் ஒருங்கிணைப்பு இல்லாமல் நடந்ததாகவும், இது சட்டவிரோதமானவை என்று ராணுவம் கூறிய நிலையில், சூடானில் ராணுவ மோதல் நிலவி வருகிறது.

அதிகரித்த உயிரிழப்பு : 

இந்த மோதலில் கேரளாவைச் சேர்ந்தவ ஆல்பர்ட் அகஸ்டீன் என்ற இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதில் ஏற்கனவே 180 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது.  ராணுவத்துக்கும் துணை ராணுவப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 1,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கட்டுப்பாட்டு அறை :

சூடானில் தொடர்ந்து மோதல்கள் நடந்து வரும் நிலையில் இந்தியர்களுக்கு 24×7 உதவும் வகையில் வெளியுறவு அமைச்சகம் (MEA) சிறப்பு கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. மேலும், வாட்ஸ்அப் எண் +91-8010611290, கட்டணமில்லா தொலைபேசி எண் 1800-11-8797 மற்றும் பிற எண்கள் +91-11-23012113; +91-11-23014104; +91-11-23017905, +91-9968291988 ஆகியவற்றிக்கு தொடர்பு கொள்ளலாம். வெளியுறவு அமைச்சகதால் (MEA) பகிரப்பட்ட மின்னஞ்சல் ஐடி [email protected] ஆகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்