முதல்வரின் இந்த அறிவிப்பை பாஜக வரவேற்று நன்றி சொல்கிறது – நயினார் நாகேந்திரன்
பெருமகனாருக்கு நூற்றாண்டு நினைவு மண்டபம் கட்டுவதை பாஜக வரவேற்று நன்றி சொல்கிறது என நயினார் நாகேந்திரன் பேச்சு.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது, இளையபெருமாளின் நூற்றாண்டு விழா குறித்து முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.
அவர் பேசுகையில், இளையபெருமாள் பட்டியலின மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட தலைவர். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருபது ஆண்டுகளும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர் இளையபெருமாள். மிகப்பெரிய சமூக போராட்டத்தை திகழ்தியவர் அவர்.
பிற்காலத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்திற்கு அடித்தளமாக இருந்தது இளையபெருமாள் அறிக்கைதான். பெரியவர் இளையபெருமாளுக்கு கடலூர் சிதம்பரத்தில் நூற்றாண்டு நினைவரங்கம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.
பெருமகனாருக்கு நூற்றாண்டு நினைவு மண்டபம்
இதுகுறித்து நயினார் மகேந்திரன் அவர்கள், ‘பட்டியலின, பழங்குடியின மக்களுக்காக போராடிய மாபெரும் தலைவர் இளையபெருமாள்; சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் மக்களுக்காக பணியாற்றியவர்; 110 விதியின் கீழ் அவருடைய அருமை பெருமைகளை முதலமைச்சர் ஸ்டாலின் அழகாக எடுத்துச் சொல்லியுள்ளார்; அத்தகைய பெருமகனாருக்கு நூற்றாண்டு நினைவு மண்டபம் கட்டுவதை பாஜக வரவேற்று நன்றி சொல்கிறது.’ என தெரிவித்துள்ளார்.