நிரந்தர பணியிடங்களில் ஒப்பந்த ஓட்டுநர்கள்.? வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்த சிஐடியு தொழிற்சங்கம்.!
சிஐடியு தொழிற்சங்கம் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக நோட்டீஸை வெளியிட்டுள்ளது.
சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க மாநில குழு கூட்டம் நேற்று திருப்பூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும், இதற்கான நோட்டீஸ்கள் இன்று வழங்கப்படும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இந்நிலையில், வேலைநிறுத்த போராட்டத்திற்கான நோட்டீஸை சிஐடியு தொழிற்சங்கம் வெளியிட்டுள்ளது. போக்குவரத்து கழகங்களின் தலைவர் மற்றும் போக்குவரத்து கூடுதல் தலைமை செயலாளரிடம் நோட்டீஸை வழங்கினர். அதில், போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளது.
மேலும், நிரந்தர பணியிடங்களில் ஒப்பந்த தொழிலாளர்களை நியமிக்கக் கூடாது என சிஐடியு தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது. இந்த வேலை நிறுத்த போராட்டம் வரும் மே மாதம் 3 ஆம் தேதி அல்லது அதனைத்தாண்டி 6 வாரங்களுக்குள் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.