இந்தியாவின் முதல் ஆப்பிள் நேரடி விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார் – டிம் குக்.!
இந்தியாவின் முதல் ஆப்பிள் விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார், ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்.
மும்பை: ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், மும்பையில் ‘Apple BKC’ எனப்படும் இந்தியாவின் முதல் ஆப்பிள் சில்லறை விற்பனைக் கடையை இன்று திறந்து வைத்தார்.
Apple CEO Tim Cook opens official store in BKC, Mumbai. pic.twitter.com/74BWRSsmAF
— Indian Tech & Infra (@IndianTechGuide) April 18, 2023
பாந்த்ரா குர்லா வளாகத்தில் அமைந்துள்ள முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ஜியோ வேர்ல்ட் டிரைவ் மாலில் இந்த கடை அமைந்துள்ளது. இந்தியா வந்துள்ள ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் இன்று காலை 11 மணிக்கு அந்த ஆப்பிள் பிகேசி ஸ்டோரை பொது மக்களுக்கு திறந்து வைத்தார்.
The energy, creativity, and passion in Mumbai is incredible! We are so excited to open Apple BKC — our first store in India. pic.twitter.com/talx2ZQEMl
— Tim Cook (@tim_cook) April 18, 2023
மேலும், கடைக்கு வருகை தந்த வாடிக்கையாளர்களை வாழ்த்தி சிலருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். பின்னர், இந்த விழாவில் பேசிய Apple-ன் CEO டிம் குக், “ஆப்பிளில், உலகெங்கிலும் உள்ள மக்களின் வாழ்க்கையை வளப்படுத்துவதும், அதிகாரம் அளிப்பதும் எங்கள் நோக்கம் ஆகும்” என்று கூறினார்.
மேலும், இதன் இரண்டாவது கடை ஏப்ரல் 20 ஆம் தேதி டெல்லியில் உள்ள சாகேத்தில் திறக்கப்பட இருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் இயங்கி 25 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடிய நிலையில், இந்த புதிய ஸ்டார்கள் திறக்கப்பட்டுகிறது.
Apple BKC ஸ்டோரில் 20க்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசும் 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். புதியதாக திறக்கப்பட்ட ஸ்டோர்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைனில் ஆர்டர் செய்வதையும், அவர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும் போது பொருட்களை எடுப்பதையும் எளிதாக்குகிறது.