#Accenture: 19,000 பேரை பணிநீக்கம் செய்த முன்னணி ஐடி நிறுவனம்.!
முன்னணி ஐடி நிறுவனமான அக்சென்ச்சர் 19,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களில் 2.5 சதவீதம் பேர் பணிநீக்கம் செய்யப்படுவதாகவும், அவர்கள் இன்னும் 18 மாதங்களில் தங்கள் பணியிலிருந்து வெளியேறுவார்கள் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
நிதிச் சவால்கள், ஊதியம் மற்றும் இதர செலவுகளைக் குறைக்க இந்த கடினமான முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பத் துறை நிறுவனங்கள் சமீப காலமாக, பொருளாத நிலையில் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டு வருகிறது.
சமீபத்தில், பல நிறுவனங்கள் தனது ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. கூகுள், மெட்டா மற்றும் அமேசான் போன்ற பல நிறுவனங்கள் பணிநீக்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.