ஆன்லைன் செயலியில் கடன் பெற்ற இளைஞர் தற்கொலை..!
ஆன்லைன் செயலியில் கடன் பெற்று திரும்ப செலுத்த முடியாததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளைஞர்.
சமீப காலமாக ஆன்லைன் விளையாட்டுக்களால் தற்கொலை தொடர்ந்து வந்த நிலையில், தற்போது ஆன்லைன் கடன் வழங்கும் செயலியாலும் தற்கொலைகள் பெருகி வருகிறது.
இளைஞர் தற்கொலை
அந்த வகையில், செங்கல்பட்டு அருகே ஆன்லைன் செயலியில் கடன் பெற்ற இளைஞர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். பள்ளியகரம் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வசந்த் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆன்லைன் செயலியில் கடன் பெற்று திரும்ப செலுத்த முடியாததால் அவர் இந்த விபரீத முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. 22 வயதான இளைஞர் வசந்தின் உடலை கைப்பற்றி படாளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வசந்த் தற்கொலை செய்வதற்கு முன்பு செல்போன் சிம்கார்டை உடைத்தெறிந்துள்ளார்.