கட்டிடம் இடிந்து விழுந்து பயங்கர விபத்து.! பரிதாபமாக உயிரிழந்த 4 பேர்.!
3 மாடி அரிசி ஆலை இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி, 20 பேர் காயம்.
ஹரியானா மாநிலம் கர்னல் பகுதியில் உள்ள மூன்று மாடி கொண்ட, அரிசி ஆலை இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். பணியை முடித்துவிட்டு ஆலையிலேயே தூங்கிய பணியாளர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் இந்த விபத்தில் சிக்கினர்.
இந்த விபத்தையடுத்து, தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 20 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.
இன்னும், 76 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. தற்போது, விபத்து குறித்து மில் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.