கேப்டன் கூல் ஆட்டத்தை பார்க்க வந்த ‘கேப்டன் மில்லர்’…சூப்பர் ஸ்டாருடன் பெங்களூர் மைதானத்தில் தனுஷ்.!!
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் கேப்டன் மில்லர் படத்தின் நட்சத்திரங்கள் தனுஷ் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் வருகை தந்தனர்.
தனுஷ் தனது கேப்டன் மில்லர் கெட்டப்பில் அடர்ந்த, தாடியுடன் நடித்தார் இருந்தார். அவருடன் வருகை தந்திருந்த கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் ஆர்சிபி ஜெர்சியில் எளிமையாக இருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Dhanush & Shiva Rajkumar watching RCB vs CSK match in IPL.
Two legendary actors in Indian cinema. pic.twitter.com/l5UqdqgErt
— Johns. (@CricCrazyJohns) April 18, 2023
தனுஷ் தோனியுடைய தீவிர ரசிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் எனவே, நேற்று போட்டியை பார்க்க வந்த தனுஷின் புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் ” கேப்டன் கூல் ஆட்டத்தை பார்க்க வந்த ‘கேப்டன் மில்லர்’ என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
மேலும் நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் 1940 களில் நடக்கும் ஒரு பீரியட் ஆக்ஷன் த்ரில்லர் படம் விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.