எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு!
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனு.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கக் கூடாது என இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் விவகாரத்தில் 10 நாட்களில் தேர்தல் ஆணையம் தனது முடிவை கூற டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனு அளித்துள்ளார். நான் தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பார் என்று தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார் ஓ.பி.எஸ்.
அதிமுக பொதுச்செயலாளர் விவகாரத்தில் 10 நாட்களில் ஆணையம் முடிவு எடுக்க டெல்லி உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனு அளித்துள்ளது. பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கரிக்கக்கூடாது என்று ஏற்கனவே ஒபன்னீர்செல்வம் ஆதரவாளர் புகழேந்தி மனு அளித்திருந்தார். இந்த நிலையில், இபிஎஸ்-க்கு ஓபிஎஸ்-யும் மனு அளித்துள்ளார்.