CSKvSRH : சேப்பாக்கம் மைதானத்தில் டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்.! நீண்ட வரிசையில் ரசிகர்கள்…
ஏப்ரல் 21ம் தேதி CSK – SRH அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் வாங்க இன்று நீண்ட வரிசையில் காத்திருந்த ரசிகர்கள்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், ஏப்ரல் 21-ம் சென்னை – ஐதராபாத் அணிகள் மோதவுள்ள போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இன்றைய டிக்கெட் விற்பனைக்கு காலையில் தான் ரசிகர்கள் வர வேண்டும் என்று காவல்துறை சார்பில் உத்தரவிடப்பட்டது.
ஆனால், சிகர்கள் நள்ளிரவு முதலே அங்கு காத்திருந்து டிக்கெட்டுகளை வாங்கி சென்றனர். அதன்படி, கவுன்டரில் 1,500, 2,000 மற்றும் 2,500 ரூபாய் விலை நிர்ணயம் செய்து டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்த சிலரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 6-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி, வருகின்ற 21-ம் தேதிசென்னை சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ளது.