சூடானில் ஏற்பட்ட பயங்கர மோதல்…190 பேர் பலி…1,500க்கும் மேற்பட்டோர் காயம்.!!
சூடானில் ஏற்பட்ட பயங்கர மோதலில் பலியானோர் எண்ணிக்கை 190-ஆக உயர்ந்துள்ளது.
சூடான் நாட்டில் ராணுவத்துக்கும், துணை ராணுவ ஆதரவு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் அங்கு கடும் துப்பாக்கிச் சூடு மற்றும் கலவரங்கள் நடந்து வருகிறது. சக்தி வாய்ந்த துணை ராணுவக் குழுவான ஆர்ஸ்எஃப்-ன் (RSF) நடவடிக்கைகள் ஒருங்கிணைப்பு இல்லாமல் நடந்ததாகவும், இது சட்டவிரோதமானவை என்று ராணுவம் கூறிய நிலையில், சூடானில் ராணுவ மோதல் நிலவி வருகிறது.
இந்நிலையில், இந்த மோதலில் ஏற்கனவே 97 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 180-ஆக உயர்ந்துள்ளது. அங்கு நடந்த கலவரம் மற்றும் துப்பாக்கிசூட்டில் 1,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இந்த மோதலில் கேரளாவைச் சேர்ந்தவ ஆல்பர்ட் அகஸ்டீன் என்ற இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதில் காயமடைந்தவர்கள் நிலைமை மிகவும் கவலைகடமாக உள்ள காரணத்தால் இன்னும் பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாகவும் அங்கு இருக்கும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.