#IPL2023: சென்னை – லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டி தேதி மாற்றம்!
மே 4ம் தேதி நடைபெறவிருந்த சென்னை – லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டி தேதி மாற்றம் செய்து அறிவிப்பு.
2023-ஆம் ஆண்டுக்கான 16-ஆவது சீசன் ஐபிஎல் தொடர் களைகட்டி வருகிறது. ஐபிஎஸ் தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் உள்ளூர் மற்றும் வெளியூரில் விளையாடி வருகிறது. இந்தாண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை 24 லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், புள்ளி பட்டியலில் நீனா நானா என்று போட்டி நிலவுகிறது.
இதில் ராஜஸ்தான் அணி 8 புள்ளிகளுடன் முதலிடத்திலும், லக்னோ, சென்னை, குஜராத் ஆகிய அணிகள் தலா 6 புள்ளிகளுடன் மற்ற மூன்று இடங்களில் உள்ளனர். ஒவ்வொரு அணியும் கிட்டத்தட்ட 5 போட்டிகளை விளையாடியுள்னனர். இந்த நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், சென்னை – லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டி தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது, மே 4ம் தேதி மாலை 3.30 மணிக்கு லக்னோவில் நடைபெறவிருந்த சென்னை – லக்னோ அணிகளுக்கு இடையிலான 46வது லீக் போட்டி மே 3ம் தேதி மாலை 3.30 மணிக்கு நடைபெறும் என மாற்றம் செய்து ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. மே 4ல் லக்னோ மாநகராட்சிக்கு தேர்தல் நடைபெறுவதால், போட்டியின் தேதி மாற்றப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.