ரசிகர்களுக்கு குட் நியூஸ்; ஓய்வு முடிவு குறித்து மனம் திறந்த தல தோனி.!
ஐபிஎல் தொடரில் ஓய்வு பற்றி கேட்கப்பட்டபோது, அது குறித்து முடிவு செய்ய இன்னும் நிறைய நேரம் இருக்கிறது என தோனி கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் சிஎஸ்கே அணிக்காக விளையாடிவரும் அணித்தலைவர் மகேந்திர சிங் தோனி, கடந்த 2008 முதல் சென்னை அணிக்கு கேப்டனாக வழிநடத்தி வருகிறார். முன்னாள் இந்திய கேப்டன் தோனி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து 2019 ஆம் ஆண்டு ஓய்வு முடிவை அறிவித்தார்.
அதன்பிறகு ஐபிஎல் தொடரில் மட்டுமே தோனியை பார்க்க முடிகிறது. ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான கேப்டனாக இருந்துவரும் தோனி, சிஎஸ்கே அணிக்காக இதுவரை 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி தனது ஓய்வு முடிவை எப்போது அறிவிப்பார் என அவ்வப்போது பேசப்படுவது வழக்கம்.
இதேபோல் கடந்த ஐபிஎல் சீசனில், ஓய்வு முடிவு பற்றி கேட்கப்பட்டபோது தோனி நிச்சயமாக இல்லை, அடுத்த வருடமும் விளையாடுவேன் என கூறியிருந்தார். தற்போது தோனியிடம் இதே கேள்வி கேட்கப்பட்ட போதும், தோனி அந்த முடிவைப்பற்றி யோசிப்பதற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது.
இன்னும் இந்த ஐபிஎல் தொடரில் எங்களுக்கு நிறைய போட்டிகள் மீதமுள்ளன, அதைப்பற்றி தற்போது யோசித்தால் எங்கள் அணி பயிற்சியாளருக்கு அது மேலும் அழுத்தத்தை கொடுக்கத்துவிடும், இதனால் நான் தற்போது எதையும் கூறி அவரை அழுத்தத்தில் விடுவதற்கு விரும்பவில்லை என தோனி கூறியுள்ளார். இதனால் தோனி இன்னும் ஒருவருடம் ஐபிஎல் விளையாடுவார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.