அனைத்து நீர்நிலை பகுதிகளிலும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் – விஜயகாந்த்
மாணவர்களின் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் எங்கு செல்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும் என விஜயகாந்த் அறிவுறுத்தல்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே நீர்நிலைகளில் மூழ்கி மாணவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேப்டன் விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார்.
விஜயகாந்த் அறிக்கை
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூர் நொய்யல் ஆற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே நீர்நிலைகளில் மூழ்கி மாணவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
மனதை உளுக்கும் இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் நீர்நிலைகளில் எவ்வித பாதுகாப்பும் இன்றி குளிக்க செல்வதால் ஏற்படும் ஆபத்தை மாணவர்களுக்கு எடுத்துரைப்பதுடன், அனைத்து நீர்நிலை பகுதிகளிலும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்.
மாணவர்களின் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் எங்கு செல்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும். மாணவர்களின் உயிரிழப்பு செய்திகளை காணும் போது மிகுந்த மன வேதனை அளிக்கிறது. மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் எங்கு செல்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும்.
மாணவர்களின் உயிரிழப்பு செய்திகளை காணும் போது மிகுந்த மன வேதனை அளிக்கிறது. மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். (3-3) pic.twitter.com/c9ijU6idPb— Vijayakant (@iVijayakant) April 17, 2023