சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்.! பிரதமர் மோடிக்கு மல்லிகார்ஜூன கார்கே கடிதம்.!

Default Image

புதிய சாதிவாரி கணக்கெடுப்பு மிகவும் அவசியம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பிரதமர் மோடிக்கு  கடிதம் அனுப்பியுள்ளார்.

சமூக நீதியை உறுதிப்படுத்தும் வகையில் புதுப்பிக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு மிகவும் அவசியம், குறிப்பாக ஓபிசி பிரிவினருக்கான தரவு முழுமையடையவில்லை. கடந்த 2011-2012ம் ஆண்டு நடத்தப்பட்ட சமூக பொருளாதார மற்றும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் தரவை, ,வெளியிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் அனுப்பியுள்ளார்.

மல்லிகார்ஜூன கார்கே எழுதிய கடிதத்தில், இன்னும் வெளியிடப்படாத 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஜாதிவாரி கணக்கெடுப்பு ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் உட்பட பல எதிர்க்கட்சித் தலைவர்கள், ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கான கோரிக்கையை நாடாளுமன்றத்தில் பலமுறை எழுப்பியதை கார்கே சுட்டிக்காட்டினார்.

OBC மக்களுக்கு அதிகாரமளிக்க புதுப்பிக்கப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். OBC-யினருக்கு சமூகநீதி அதிகாரமளிக்க ஜாதிவாரியான கணக்கெடுப்பு மிக அவசியமான நம்பகம் மிக்க தரவுத்தளமாக மாறும். மக்கள்தொகை கணக்கெடுப்புடன் இதை இணைந்து மேற்கொள்ள வேண்டியது மத்திய அரசின் பொறுப்புகள் என குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்