அரசு கருவூல பொருட்கள் ஜப்தி – நீதிமன்றம் உத்தரவு
அரசு கருவூல பொருட்கள் ஜப்தி செய்ய பூவிருந்தவல்லி சார்பு நீதிமன்ற உத்தரவு.
பூவிருந்தவல்லி சார்பு நீதிமன்ற உத்தரவின்படி, அரசு கருவூல பொருட்கள் ஜப்தி செய்யப்பட்டன. கடந்த 1982 முதல் 41 ஆண்டுகளாக நடந்த வழக்கில் நிலுவை தொகையை வழங்காததால் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 1971-ல் திருவான்மியூரில் பதம் சந்த் என்பவருடைய 72 ஏக்கர் நிலம் வீட்டு வசதி வாரியம் மூலம் கையகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடப்படுகிறது.
72 ஏக்கர் நிலத்துக்கு 4 கட்டங்களாக இழப்பீடு தொகை வழங்கிய நிலையில், இறுதி தொகை வழங்கப்படாததால் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கில் இறுதி தொகை வழங்கப்படாததால் அரசு கருவூல பொருட்களை ஜப்தி செய்ய பூவிருந்தவல்லி சார்பு நீதிமன்ற உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை அடுத்து அரசு கருவூலத்தில் உள்ள மேஜை, நாற்காலி மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் ஜப்தி செய்தனர்.