கருணாநிதி பிறந்தநாளன்று பள்ளிகளில் சர்க்கரை பொங்கல் – கீதா ஜீவன் அறிவிப்பு!
கலைஞர் கருணாநிதி பிறந்தநாளன்று பள்ளிகளில் சர்க்கரை பொங்கல் வழங்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், முதலமைச்சரின் ‘பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்’ மறு சீரமைக்கப்படும்.
- குழந்தைகளின் வளர்ச்சியை கண்காணிக்கும் வகையில் 18,573 குழந்தைகள் மையங்களுக்கு ரூ.14.85 கோடி மதிப்பில் வளர்ச்சி கண்காணிப்பு கருவிகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.
- சத்துணவு திட்டத்தில் பயனடைந்து வரும் குழந்தைகளுக்கு, டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி பிறந்த நாளன்று இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
- சென்னை, திருச்சி, மற்றும் கோயம்புத்தூரில் ரூ.1.14 கோடி செலவில் குழந்தைகளுக்கான போதை தடுப்பு மையங்கள் அமைக்கப்படும் என்றும் சத்துணவு மையங்களுக்கு ரூ.25.70 கோடி செலவில் 17,312 அரசுப் பள்ளிகளுக்கு புதிய சமையல் உபகரணங்கள் வழங்கப்படும் எனவு அறிவித்தார்.
- மாற்றுத்திறனாளிகளுக்கு 2 ஆண்டுகளில் 598 வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் மூலம் வழங்கப்படும் நிவாரண உயர்த்தி தரப்படும்.
- உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கட்டப்படும் வணிக வளாகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% ஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.