விரைவில் தேர்வெழுதும் முறை மாற்றப்படும்! பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்,பாடங்களை மனப்பாடம் செய்து, தேர்வு எழுதும் முறை முற்றிலும் மாற்றியமைக்கப்படும் என்றும், எதிர்காலத்தில் நீட் தேர்வில் மாணவர்கள் கஷ்டப்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், எதிர்காலத்தில் மத்திய அரசு எந்த தேர்வை கொண்டுவந்தாலும், அதை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று கூறினார்.
முன்னதாக அரசு ஆரம்ப பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி கொண்டு வரும் திட்டம் ஆய்வில் உள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் சட்டப்பேரவையில் தெரிவித்தார். மேலும் பள்ளிகளை தரம் உயர்த்தும்போது பொதுமக்கள் பங்களிப்பு செலுத்துவது தொடர்பான பிரச்சனையில் முதல்வருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.