#IPL2023: இன்று பெங்களூர் – சென்னை அணிகள் மோதல்.!!
இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதவுள்ளது.
16-வது சீசன் ஐபிஎல் தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 24-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் சென்னை சேப்பாக் மைதானத்தில் விளையாடவுள்ளது.
இந்த சீசனில் சென்னை அணி 4 போட்டிகள் விளையாடி 2 போட்டியில் வெற்றியை பதிவு செய்து புள்ளி விவர பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. இதைப்போல பெங்களூர் அணியும் 4 போட்டிகள் விளையாடி 2 போட்டியில் வெற்றியை பதிவு செய்து புள்ளி விவர பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.
கிட்டத்தட்ட இரண்டு அணிகளும் ஒரே அளவில் தான் இருக்கிறது. ஒருவேளை இன்று நடைபெறும் இந்த போட்டியில் பெங்களூர் அணி வெற்றிபெற்றால் சென்னையை அணியை பின்னுக்கு தள்ளி புள்ளி விவரப்பட்டியலில் முன்னுக்கு சென்றுவிடும்.
அதைப்போல சென்னை அணி வெற்றிபெற்றால், 4-வது இடத்திற்கு செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளது. மேலும் இதற்கு முன்பு இந்த இரண்டு அணிகளும் 30 போட்டியில் நேருக்கு நேர் மோதியதில் 10 போட்டியில் பெங்களூர் அணியும், 19 போட்டியில் சென்னை அணியும் வெற்றிபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.