அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை – விழிப்புணர்வு பேரணி தொடக்கம்
சென்னை அரசு மாதிரி பள்ளியில் பிரச்சார வாகனத்தை அமைச்சர்கள் சேர்ப்பாபு, அன்பின் மகேஷ் தொடங்கி வைத்தனர்.
தமிழகத்தில் இருக்கும் அணைத்து அரசு பள்ளிகளும் வரும் 2023-2024 ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை குறித்த வாகன விழிப்புணர்வு “அரசு பள்ளிகளைக் கொண்டாடுவோம்” என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு பேரணி தொடக்கம்
சென்னை அரசு மாதிரி பள்ளியில் பிரச்சார வாகனத்தை அமைச்சர்கள் சேர்ப்பாபு, அன்பின் மகேஷ் தொடங்கி வைத்தனர். அரசு பள்ளியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி விழிப்புணர்வு துண்டு பிரச்சாரங்களை வழங்கினர்.
அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க ஏப்ரல் 28ஆம் தேதி வரை விழிப்புணர்வு பேரணி நடைபெற உள்ளது. எப்போதும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஜூன் மாதத்தில் தான் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதமே தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.