பரபரப்பு…கிரிக்கெட் மைதானத்தில் சண்டை… இரண்டு வீரர்களுக்கு அபராதம்.!

Default Image

ஐபிஎல் 2023 இன் 22-வது லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதியது. இந்த போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹிருத்திக் ஷோக்கீனும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  கேப்டன் நிதிஷ் ராணாவும்  கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஹிருத்திக் வீசிய பந்தில் ராணா தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது  ஹிருத்திக் ஏதோ கூறினார். இதனால் செம கடுப்பான நிதிஷ் ராணா அவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனை பார்த்த சூர்யகுமார் யாதவ் உடனடியாக தலையிட்டு ராணாவை இழுத்துச் சென்றார்.

இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும்  போட்டியின் போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட மும்பை வீரர் ரித்திக் ஹிருத்திக் ஷோகீனுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 10% அபராதமும், கொல்கத்தா கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு 25% அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 185 ரன்கள் குவித்தது. அடுத்ததாக களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி அதிரடியாக விளையாடி 17.4 ஓவர்களில் 186 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்