Today’s Live : இன்னும் 48 மணி நேரம் கெடு..! அண்ணாமலைக்கு திமுக நோட்டீஸ்..!
திமுக நோட்டீஸ் :
திமுக நிர்வாகிகள் மீது அவதூறான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக, BJP மாநில தலைவர் அண்ணாமலைக்கு ரூ.500 கோடி இழப்பீடு கேட்டு திமுக நோட்டீஸ் வழங்கியுள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் வில்சன் எம்பி அனுப்பிய நோட்டீஸில், திமுக மீதான ஆதாரமற்ற அவதூறான, கற்பனையான குற்றச்சாட்டுகளுக்கு 48 மணி நேரத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்க தவறினால் குற்றவியல் வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
16.04.2023 6:15 PM
ஆர்.எஸ்.எஸ் பேரணி :
தமிழகம் முழுவதும் சற்றுமுன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் பேரணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கோவையில் நடைபெறும் பேரணியில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கலந்து கொண்டுள்ளார். அடிப்படை ஆர்.எஸ்.எஸ். உறுப்பினரான இவர், அவர்களின் சீருடையுடன் பேரணியில் கலந்து கொண்டார். தமிழகம் முழுவதும் 45 இடங்களில் இந்த பேரணி நடத்தப்படுகிறது இந்த பேரணியால் அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க காவல்துறை கட்டுப்பாடு அதிகரிக்கப்பட்டுள்ளது.
#WATCH | Rashtriya Swayamsevak Sangh members conduct route march in Chennai
Similar route marches are being held across 45 locations in Tamil Nadu pic.twitter.com/FdRByUuzKK
— ANI (@ANI) April 16, 2023
16.04.2023 4:15 PM
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை :
நாடு முழுவதும் கடுமையான வெப்பம் நிலவி வருவதால் மேற்கு வங்க மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு திங்கள் முதல் ஞாயிற்றுகிழமை வரை ஒருவாரம் விடுமுறை அளித்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மாணவர்கள் வெயிலில் வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டிலும் கோடை வெயில் வெளுத்து வாங்குவதால் 1-9ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது.
16.04.2023 2:50 PM
நீர்மோர் பந்தல் :
வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் ஆங்காங்கே நீர்மோர் பந்தலை திறந்து வைத்து வருகின்றனர். அதன்படி, சென்னையில் பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் ஓபிஎஸ் நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு மோர், ஜூஸ் உள்ளிட்டவைகளை வழங்கினார். நேற்று சேலம் மாவட்டத்தில் அதிமுக சார்பில் இபிஎஸ் நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார்.
16.04.2023 2:30 PM
முதல்வர் நிதியுதவி :
திருப்பூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறார்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நொய்யல் ஆற்றில் குளித்த பொழுது இனியவன், சந்துரு, புவனா, செல்வன், வினோத் ஆகியோர் உயிரிழந்தனர் என்ற செய்தி கேட்டு வேதனை அடைந்தேன். அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
16.04.2023 1:50 PM
இபிஎஸ் பரிசு :
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான மகேந்திரா ஸ்கார்ப்பியோ காரை இன்று பரிசு அளிக்கிறார். இன்று மதியம் செயற்குழு கூட்டத்திற்கு பின் புதிய கார் சாவியை அவரிடம் இபிஎஸ் வழங்கவுள்ளார். அந்த காரின் நம்பர் TN06 AD 5666 என குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுச் செயலாளராக தேர்வான பின் இபிஎஸ் வழங்கும் மிகப்பெரிய பரிசு இதுதான்.
16.04.2023 12:50 PM
56 பேர் மரணம் :
சூடானில் ராணுவம், துணை ராணுவம் இடையே ஏற்பட்டுள்ள மோதலில் இந்தியர் உட்பட 56 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவை சேர்ந்த ஆல்பர்ட் அகஸ்டின் என்பவர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார். அவரது குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாக இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. மேலும், சூடானில் பதற்றம் நிலவுவதால் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
16.04.2023 11:50 AM
விசாரணைக்கு கெஜ்ரிவால் ஆஜர் :
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிபிஐ முன் ஆஜரானார். இந்த வழக்கில் ஏற்கனவே துணை முதல்வராக இருந்த சிசோடியா கைது செய்யப்பட்டுள்ளார். கெஜ்ரிவாலின் விசாரணையை அடுத்து ஏராளமான ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிபிஐ அலுவலகம் முன் பலத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
16.04.2023 11:30 AM
கெஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் நன்றி :
சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என கூறிய டெல்லி முதல்வர் அரவிந்த் தமிழ்நாட்டை பின்பற்றி டெல்லி கெஜ்ரிவாலுக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தர கால நிர்ணயம் செய்ய வேண்டும். இந்த தீ நாடு முழுவதும் பரவட்டும். உண்மையில், எந்தவொரு ஜனநாயகத்திலும் சட்டமன்றத்தின் இறையாண்மையே உயர்ந்தது என்று தெரிவித்துள்ளார்.
16.04.2023 11:10 AM
வெளியுறவுத்துறை அமைச்சர் ட்வீட்:
வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனுடன் பேசினார். அவர்களை தற்போதைய பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. எங்கள் இருதரப்பு உறவுகளில் நிலையான முன்னேற்றத்தைக் குறிப்பிட்டேன்” என்று வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் ட்வீட் செய்துள்ளார்.
A warm conversation, as always with US Secretary of State @SecBlinken this morning.
Discussed current regional and global issues. Noted the steady progress in our bilateral ties.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) April 16, 2023
16.04.2023 10:10 AM