தமிழ்நாட்டைப் போல டெல்லியிலும் தீர்மானம்; முதல்வர் ஸ்டாலினுக்கு, கெஜ்ரிவால் கடிதம்.!
சிபிஐ விசாரணைக்கு ஒருநாளைக்கு முன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், ஸ்டாலினுக்கு தனது ஆதரவு கடிதத்தை எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஆளுநருக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது போல், டெல்லியிலும் ஆளுநர்களின் செயல்பாடுகளுக்கு கால நிர்ணயம் செய்ய வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வருவோம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
தமிழக அரசு மற்றும் ஆளுநருக்கு இடையே நடந்துவரும் மோதல் குறித்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஸ்டாலினுக்கு தனது ஆதரவை தெரிவித்து எழுதியுள்ள இந்த கடிதத்தில், இந்தியாவில் ஜனநாயகம் ஒவ்வொரு நாளும் பாதிக்கப்படுகிறது என்று கூறினார்.
டெல்லி மதுக் கொள்கை வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கெஜ்ரிவாலுக்கு மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ), சம்மன் அனுப்பியுள்ள நிலையில், இந்த நிகழ்வு அரசியலில் பெரும் திருப்பமாக பார்க்கப்படுகிறது. முதல்வர் ஸ்டாலினுக்கு தெரிவித்த ஆதரவு கடிதத்தை கெஜ்ரிவால், தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார், அதில் அவர், பாஜக ஆளாத மாநில அரசுகளின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் மத்திய அரசு மற்றும் அதன் பிரதிநிதிகளின் நடவடிக்கைகளை நாங்கள் கண்டிக்கிறோம் என்று கூறினார்.
பாஜக அல்லாத ஆட்சியின் கவர்னர்கள் அல்லது லெப்டினன்ட் கவர்னர்கள் காலவரையின்றி சட்டப் பேரவைகளால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள், அல்லது அரசு அனுப்பிய கோப்புகளை வைத்திருப்பது நமது அரசியலமைப்புத் திட்டத்தை மீறுவது மட்டுமல்ல ஆனால் மக்கள் ஆணையை மதிக்காதது என்று கருதப்படுகிறது.
முன்னதாக மதுக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் சிபிஐ, நாளை காலை 11 மணிக்கு விசாரிக்கவுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே டெல்லி முன்னாள் துணை முதல்வர் மனிஷ் சிசோடியா சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
We condemn the actions of Centre & its representatives to usurp & constrain powers of non-BJP State Govts. I support Shri @mkstalin‘s efforts. We will also table a resolution in Delhi Vidhan Sabha urging the Centre to fix time limits for Governors/LG to carry out their functions. pic.twitter.com/jHizPTmL0U
— Arvind Kejriwal (@ArvindKejriwal) April 15, 2023