முதல்முறையாக தமிழிலும் சி.ஆர்.பி.எஃப் தேர்வு! அமித்ஷாவின்அறிவிப்பிற்கு முதல்வர் வரவேற்பு..!
அனைத்து யூனியன் அரசு தேர்வுகளிலும் தமிழ் மற்றும் பிற மாநில மொழிகளில் வினாத்தாள்களை வழங்குவதற்கான எங்கள் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறேன் என முதல்வர் ட்வீட்.
தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் ஒன்றிய அரசின் ஆயுதப்படை காவலர் தேர்வு நடத்தப்படும் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மாநில மொழிகளில் தேர்வு நடத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்த நிலையில், உள்துறை அமைச்சகம் அதனை ஏற்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அமித்ஷாவின் அறிவிப்பு
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இந்த அறிவிப்புக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.
முதல்வர் வரவேற்பு
அந்த பதிவில், ‘ நான் எழுதிய கடிதத்தின் விளைவாக
மத்திய அரசு அனைத்து மாநில மொழிகளிலும் CAPF தேர்வுகளை நடத்துவதாக அறிவித்துள்ளது. இந்த முடிவை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன் மற்றும் அனைத்து யூனியன் அரசு தேர்வுகளிலும் தமிழ் மற்றும் பிற மாநில மொழிகளில் வினாத்தாள்களை வழங்குவதற்கான எங்கள் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக, வரும் 17-ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழ் மொழியில் அரசின் ஆயுதப்படை காவலர் தேர்வு நடத்தப்படும் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவிப்பையடுத்து அமைச்சர் உதயநிதி தலைமையில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
As a result of my letter to Hon @AmitShah, the Union Govt has announced that it would conduct the CAPF exams in all state languages.
I wholeheartedly welcome this decision & reiterate our demand to provide Question Papers in Tamil & other state languages in all Union Govt exams. https://t.co/3uiihPKdum
— M.K.Stalin (@mkstalin) April 15, 2023
முதல்முறையாக தமிழிலும் சி.ஆர்.பி.எஃப் தேர்வு!