இரவில் பார்ட்டி…காலையில் அதிர்ச்சி…நடிகை ஷாலு ஷம்மு போலீஸில் புகார்.!
நடிகை ஷாலு ஷம்மு சூரிக்கு ஜோடியாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர். இந்த படத்தை தொடர்ந்து இவர் தன்னுடைய சமூக வலைத்தளங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டதன் மூலம் இன்னும் பிரபலமானார்.
இந்நிலையில், இவர் தன்னுடைய ஐபோன் காணவில்லை என்று காவல் நிலையத்தில் தற்போது புகார் அளித்துள்ளார். கடந்த ஏப்ரல் 9- ஆம் தேதி இரவு ஈஸ்டர் பண்டிகையன்று ஷாலு சம்மு தனது நண்பர்களோடு இணைந்து பார்ட்டிக்காக எம்.ஆர்.சி நகரில் உள்ள சேமர்செட் என்ற நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றுள்ளார்.
நள்ளிரவு 2 மணியளவில் அந்த பார்ட்டியை முடித்துவிட்டு ஷாலு சம்மு சூளைமேட்டி உள்ள நண்பர் வீட்டில் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது. பிறகு அடுத்த நாள் காலையில் எழுந்து பார்த்த போது ஷாலு ஷம்மு வாங்கி இருந்த விலையுயர்ந்த ஐபோன் காணவில்லை.
இதனால் கடும் ஷாக்கான ஷாலு சம்மு தங்கியிருந்த நட்சத்திர விடுதிக்கு சென்று அங்குள்ள சிசிடிவி காட்சிகளை பார்த்துள்ளார். ஆனால். அவரால் செல்போனை எங்கு வைத்தோம் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை, இதையடுத்து அவர் போலீஸில் புகார் அளித்துள்ளார். தனது உடன் இருந்த நண்பர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.