இன்றைய போட்டியில் லக்னோ மற்றும் பஞ்சாப் அணிகள் மோதல்..!

Default Image

ஐபிஎல் 2023 தொடரில் லக்னோவில் இன்று நடைபெறும் போட்டியில் லக்னோ மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. 

16-வது சீசன் ஐபிஎல் தொடர் போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருக்கும் 21-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இரவு 7:30 மணிக்கு நடைபெற உள்ளது.

ஷிகர் தவான் தலைமையில் விளையாடும் பஞ்சாப் அணி இது வரை விளையாடிய 4 போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றி பெற்றும் 2 போட்டிகளில் தோல்வியடைந்தும் 4 புள்ளிகள் எடுத்து 6 வது இடத்தில் உள்ளது. முன்னதாக நடைபெற்ற குஜராத் அணியுடனான போட்டியில் 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் குவித்தது. ஆனால், முடிவில் குஜராத் அணி, கடைசி ஓவர் வரை ஆட்டத்தைக் கொண்டு சென்று, 154 ரன்கள் அடித்து வெற்றி இலக்கை எட்டியது.

கே.எல்.ராகுல் தலைமையில் விளையாடும் லக்னோ அணி, இது வரை விளையாடிய 4 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகள் எடுத்து 2 வது இடத்தில் உள்ளது. லக்னோ அணியில் கே.எல். ராகுல், குயின்டன் டி காக், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், மார்கஸ் ஸ்டோனிஸ்,  அவேஷ் கான், ஆகியோர் அணிக்கு வலு சேர்க்கின்றனர். இதுவரை இந்த இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய போட்டியில் லக்னோ அணி வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

லக்னோ vs பஞ்சாப் : போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச வீரர்களின் பட்டியல்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் :

கேஎல் ராகுல், குயின்டன் டி காக், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், மார்கஸ் ஸ்டோனிஸ், க்ருனால் பாண்டியா, ஆயுஷ் படோனி, ரவி பிஷ்னோய், மார்க் வூட், அவேஷ் கான் மற்றும் ஜெய்தேவ் உனத்கட்/அமித் மிஸ்ரா

பஞ்சாப் கிங்ஸ் :

ஷிகர் தவான், பிரப்சிம்ரன் சிங், மாட் ஷார்ட், ஜிதேஷ் ஷர்மா, ஷாருக் கான், சாம் குர்ரான், ஹர்ப்ரீத் ப்ரார், நாதன் எல்லிஸ்/சிகந்தர் ராசா, ககிசோ ரபாடா, ராகுல் சாஹர் மற்றும் அர்ஷ்தீப் சிங்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்