பதட்டப்படாம அரசியல் பண்ணுங்க அண்ணாமலை – அதிமுக

Default Image

அவசரத்துல கைய விட்டா அண்டாகுள்ள கூட கை போகாது, பதட்டப்படாம அரசியல் பண்ணுங்க அண்ணாமலை என்று பாபு முருகவேல் விமசர்னம். 

இதுதொடர்பாக அதிமுக செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல் பதிவில், நேற்றைய Dmkfiles எனப்படும் திமுக சொத்து பட்டியல் வெளியீடு என்பது ஒரு நகைச்சுவை காட்சி. இதில் அதிமுகவை சார்ந்தவர்களின் பட்டியலையும் வெளியிடுவாராம். அவசரத்துல கைய விட்டா அண்டாகுள்ள கூட கை போகாதுனு சொல்லுவாங்க, பதட்டப்படாம அரசியல் பண்ணுங்க அண்ணாமலை என்று விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

இதனிடையே, செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக துணை பொதுச்செயலாளர் கேபி முனுசாமி, அண்ணாமலை வெளியிட்ட பட்டியல் பாஜக சார்பில் வெளியிட்டாரா? அல்லது தனிநபராக வெளியிட்டாரா?. அண்ணாமலை கூறினால் அதிமுக பதில் அதற்கேற்றவாறு இருக்கும்.

தான் மட்டுமே நாட்டுக்காக பாடுபடுபவர் போல் பேசிக்கொண்டு இருக்கிறார். நாட்டுக்காக தன்னை அர்ப்பணித்து கொண்டவர்கள் ஏராளமானோர் உள்ளனர். தான் மட்டுமே ஊழலை ஒழிக்க வந்ததுபோல் அண்ணாமலை பேசி கொண்டியிருப்பதாக கண்டனம் தெரிவித்தார். இந்த நிலையில், அதிமுக செய்தி தொடர்பாளர் பாபு முருகவேலும் விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்