சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்..! மேட்டுப்பாளையம் – உதகை கூடுதல் சிறப்பு மலை ரயில் சேவை துவக்கம்..!

Default Image

மேட்டுப்பாளையம் மற்றும் உதகை இடையே கூடுதல் சிறப்பு மலை ரயில் சேவை தொடங்கியது.

உதகையில் தற்போது கோடைகாலம் துவங்கியுள்ளது. இந்நிலையில், சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பலரும் மலைகளின் அழகை காண்பதற்காகவும் கோடை விடுமுறையை கழிப்பதற்காகவும் வருகை தருகின்றனர். இதற்காக, கோவை மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை கூடுதலாக சிறப்பு மலை ரயில் இயக்கப்பட உள்ளது என தெற்கு ரயில்வே ஏற்கனவே அறிவித்துள்ளது.

அந்தவகையில், தற்பொழுது கோடை விடுமுறையை முன்னிட்டு மேட்டுப்பாளையம் மற்றும் உதகை இடையே சிறப்பு மலை ரயில் சேவை தொடங்கியுள்ளது. இந்த சிறப்பு மலை ரயில் இன்று முதல் ஜூன் 25ம் தேதி வரை இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும், இந்த சிறப்பு ரயிலில் பயணிக்க முதல் வகுப்புக்கு ரூ.1,575 கட்டணமும், 2ம் வகுப்புக்கு ரூ.1,065 கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உலக புகழ்பெற்ற 125-வது மலர் கண்காட்சி உதகை தாவரவியல் பூங்காவில் மே மாதம் 19ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்