தமிழகத்தில் காவல்துறை தாக்கப்படுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது..! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு..!
தமிழகத்தில் காவல்துறை தாக்கப்படுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
இன்று சென்னை ராயபுரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் திமுகவின் ஆட்சி மீதும், திமுகவின் ஆட்சியில் காவலர்கள் நிலைமை குறித்தும் விமர்சனங்களையும் முன் வைத்தார். அதன்படி, தமிழகத்தில் காவல்துறை தாக்கப்படுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
மேலும், அதிமுக ஆட்சியில் கம்பீரமாக இருந்த காவல்துறை, இன்று அடி வாங்கும் காவல்துறையாக மாறிவிட்டது, காவல்துறைக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்கள் எனவும் கடந்த 2 வருடங்களில் காவல்துறையில் பல கொலைகள் மற்றும் காவல்துறையைச் சேர்ந்தவர்களை ஆளும் கட்சியை சார்ந்தவர்களே மிரட்டுவது என்று மட்டுமல்லாமல் திருச்சியில் திமுகவினர் காவல்நிலையம் புகுந்து நடத்திய தாக்குதலை மேற்கோள்காட்டி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.