அண்ணாமலைக்கு அதிமுக கண்டனம்!
தான் மட்டுமே ஊழலை ஒழிக்க வந்ததுபோல் அண்ணாமலை பேசி கொண்டியிருப்பதாக கேபி முனுசாமி கண்டனம்.
தான் மட்டுமே நாட்டுக்காக பாடுபடுபவர் போல் பேசிக்கொண்டு இருக்கிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என்று அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், அண்ணாமலை நேற்று வெளியிட்ட பட்டியல் மாநில தலைவர் என்ற அடிப்படையில் வெளியிட்டாரா? அல்லது தனிநபராக வெளியிட்டாரா? எந்த முறையில் வெளியிட்டார் என அண்ணாமலை கூறினால் அதிமுக பதில் அதற்கேற்றவாறு இருக்கும்.
அண்ணாமலை தான் மட்டுமே நாட்டுக்காக பாடுபடுபவர் போல் பேசிக்கொண்டு இருக்கிறார். நாட்டுக்காக தன்னை அர்ப்பணித்து கொண்டவர்கள் ஏராளமானோர் உள்ளனர். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் இதுபோன்ற பட்டியலை பாஜக தலைவர்கள் வெளியிட இருக்கிறார்களா? என கேள்வி எழுப்பினார். மேலும், தான் மட்டுமே ஊழலை ஒழிக்க வந்ததுபோல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசி கொண்டியிருப்பதாகவும் கண்டனம் தெரிவித்தார்.