ரபேல் வாட்ச் பில் விவகாரம் – வானதி சீனிவாசன் அதிரடி பதில்..!
பில் கேட்டீர்கள் பில் வந்ததா? இல்லையா?. பில் கேட்டீர்களா பில் சீரியல் நம்பர் கேட்டீர்களா? என வானதி சீனிவாசன் பேட்டி.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், நேற்று செய்தியாளர் சந்திப்பின் போது, திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டார். #DMKFiles விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி, திமுகவின் சொத்து என்று அண்ணாமலை கூறியது தொடர்பான ஆவணங்களை 15 நாட்களுக்குள் அவர் ஒப்படைக்க வேண்டும் என்று கெடு விதித்துள்ளார்.
இந்த நிலையில், காந்திபுரம் சித்தாபுதூர் பகுதியிலுள்ள அருள்மிகு மதுரை வீரன் கோவிலில் திட்டத்தை துவக்கி வைத்த செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனிடம் ரஃபேல் வாட்ச் பில் முரண்பாடு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், பில் கேட்டீர்கள் பில் வந்ததா? இல்லையா?. பில் கேட்டீர்கள்.. பில் சீரியல் நம்பர் கேட்டீர்களா? என கேட்டுள்ளார்.