முதல் வெற்றியை பதிவு செய்யுமா டெல்லி..? இன்று பெங்களூர் அணியுடன் மோதல்.!!
இன்று மதியம் 3:30 மணிக்கு நடைபெறும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகிறது.
16-வது சீசன் ஐபிஎல் தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று மதியம் 3.30 மணிக்கு நடைபெறவுள்ள 20-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடுகிறது. இந்த போட்டியை பெங்களூர் சின்ன சாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இன்று பெங்களூர் – டெல்லி அணிகள் மோதல் #Dinasuvadu | #RCBvDC | #DCvsRCB | #IPL2023 | #IPL23 | #IPL pic.twitter.com/w4setzBAxl
— Dinasuvadu (@Dinasuvadu) April 15, 2023
இந்த சீசனில் பெங்களூர் அணி 3 போட்டிகள் விளையாடி 2 போட்டியில் வெற்றிபெற்று புள்ளி விவர பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. டெல்லி அணி இதுவரை இந்த சீசனில் ஒரு போட்டியில் கூட வெற்றிபெறாமல் புள்ளி விவர பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
எனவே இன்று பெங்களூர் அணிக்கு எதிராக நடைபெறும் இந்த போட்டியில் வெற்றிபெற்று முதல் வெற்றியை பதிவு செய்யவேண்டும் என்ற முனைப்பில் டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி களமிறங்குகிறது.
Fine-tuning the playbook before the match ????????#PlayBold #ನಮ್ಮRCB #IPL2023 #RCBvDC pic.twitter.com/EVVvOOi7sM
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 15, 2023
இதற்கு முன்பு இந்த இரண்டு அணிகளும் நேருக்கு நேராக 27 போட்டிகள் மோதியதில் 16 போட்டியில் பெங்களூர் அணியும், 10 போட்டியில் டெல்லி அணியும் வெற்றிபெற்றுள்ளது. இன்று நடைபெறும் போட்டியில் எந்த அணி வெற்றிபெறபோகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
A new day, a new challenge, but the same belief ????
Gear up for #RCBvDC with our Match Preview ➡ https://t.co/NLFYg0cYDo#YehHaiNayiDilli #IPL2023 pic.twitter.com/cZMtdfUGbT
— Delhi Capitals (@DelhiCapitals) April 15, 2023