முதல்வரை சந்தித்த திருநங்கைகள்..! முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்..!
கலைஞரின் வழியில் திருநர்கள் அனைத்து உரிமைகளும் பெற்று வாழ்வதற்கான உதவிகளைத் தொடர்வோம் என முதல்வர் ட்வீட்.
நேற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை, திருநங்கைகள் தினத்தினையொட்டி திருநங்கைகள் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
முதல்வர் ட்வீட்
இந்த நிலையில், புகைபபடத்தை வெளியிட்டு திருநங்கைகள் தினத்தினையொட்டி முதல்வர் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பக்கத்தில், ‘திருநங்கையர் என்ற சொல்லால் அவர்தம் மாண்பு காத்ததோடு, நாட்டிலேயே முதன்முறையாக நலவாரியத்தைத் தொடங்கிச் செயலாலும் அவர்களைப் பேணியவர் கலைஞர்!
அதைத்தான் திருநங்கைகள் தினமாக கொண்டாடி வருகிறோம். கலைஞரின் வழியில் திருநர்கள் அனைத்து உரிமைகளும் பெற்று வாழ்வதற்கான உதவிகளைத் தொடர்வோம்!’ என பதிவிட்டுள்ளார்.
திருநங்கையர் என்ற சொல்லால் அவர்தம் மாண்பு காத்ததோடு, நாட்டிலேயே முதன்முறையாக நலவாரியத்தைத் தொடங்கிச் செயலாலும் அவர்களைப் பேணியவர் கலைஞர்!
அதைத்தான் #TransgendersDay-வாகக் கொண்டாடி வருகிறோம்.
கலைஞரின் வழியில் திருநர்கள் அனைத்து உரிமைகளும் பெற்று வாழ்வதற்கான உதவிகளைத் தொடர்வோம்! pic.twitter.com/zBa3gvMJW3
— M.K.Stalin (@mkstalin) April 15, 2023